விழுப்புரத்தில் திமுக அமைச்சரின் வீட்டின் அருகே இருசக்‍கர வாகனம் திருட்டு : சிசிடிவி காட்சிகளைக்‍ கொண்டு போலீசார் விசாரணை

Jul 1 2022 7:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் திமுக அமைச்சர் மஸ்தான் வீட்டருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருச்சக்கர வாகனத்தை ஒரு இளைஞர் திருடியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

விழுப்புரம் மாவட்டம் தேசூர்பேட்டையில் திமுக அமைச்சர் மஸ்தான் வீட்டின் அருகே கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள ஷெட்டில் இரவு நேரத்தில் இருச்சக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார். பின்னர், காலையில் பார்த்த போது அந்த வாகனத்தைக்‍ காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கண்ணன், தனது வீட்டின் வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது நள்ளிரவு நேரத்தில் இளைஞர் ஒருவர் வந்து இருச்சக்கர வாகனத்தின் பூட்டை லாவகமாக உடைத்து திருடி சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன. இது குறித்து கண்ணன் அளித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00