சிவகங்கை திருப்புவனம் அருகே கச்சநத்தம் கிராமத்தில், 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்‍கு - குற்றம் சாட்டப்பட்ட 27 பேருக்‍கு ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம்

Aug 5 2022 1:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கச்சநத்தம் கிராமத்தில், 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்‍கில், குற்றம் சாட்டப்பட்ட 27 பேருக்‍கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி அருகே உள்ள கச்சநத்தம் கிராமத்தினருக்கும், ஆவாரங்காடு கிராமத்தினருக்‍கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு கச்சநத்தம் கிராமத்தில் நடந்த திருவிழாவின்போது மோதல் ஏற்பட்டதால், அதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்‍கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள், இரவில் கச்சநத்தம் கிராமத்திற்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்து தாக்‍குதல் நடத்தி, பொருட்களை அடித்து நொறுக்‍கிவிட்டு தப்பியோடினர். இதில், ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்‍குப்பதிவு செய்து, 33 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்த வழக்‍கு, சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்றது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த 19 பேர் மற்றும் ஜாமினில் உள்ள 8 பேர் என 27 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவர்களுக்கான தண்டனையை நீதிபதி முத்துக்‍குமரன் இன்று அறிவித்தார். இதன்படி, குற்றவாளிகள் 27 பேருக்‍கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ​தீர்ப்பளித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00