கோவையில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் - மேலும் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

Aug 5 2022 1:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவையில் கடந்த ஆண்டு ஆசிரியர் கொடுத்த பாலியல் தொந்தரவு காரணமாக 12 ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மேலும் இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவையில் தனியார் பள்ளியில் படித்து வந்த 12 ம் வகுப்பு படித்த மாணவி 2021 ம் ஆண்டு நவம்பர் 12 ம் தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மேலும், இந்த விவகாரம் குறித்து தெரிந்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்த பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டார்.

ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கொடுத்த பாலியல் துன்புறுத்தல் காரணமாக, தற்கொலை செய்து கொண்ட மாணவி எழுதி வைத்த கடிதம் கைப்பற்றப்பட்டது.

அந்த கடிதத்தில் சிலரின் பெயரை குறிப்பிட்டு அவர்களை விடக்கூடாது என எழுதி இருந்தார். கடிதத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தினர். கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்த சுல்தான் என்பவரையும், மாணவியுடன் படித்த சக மாணவியின் தந்தை மோகன்ராஜ் என்பவரையும் விசாரித்ததில் இருவரும் மாணவியை பாலியல் சீண்டல் செய்து இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00