ஈரோடு சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரம் - தனியார் மருத்துவமனை சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

Aug 5 2022 2:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

கருமுட்டை விற்பனை விவகாரம் தொடர்பாக ஈரோடு மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் கருமுட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரத்தில், அங்குள்ள தனியார் மருத்துவமனையின் பதிவை சஸ்பெண்ட் செய்து, ஸ்கேன் மையங்களுக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். இதை எதிர்த்து தனியார் மருத்துவமனை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக மருத்துவ மற்றும் ஊரக சுகாதார பணிகள் இயக்குனர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி திரு. முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு விசாரித்தது.

அப்போது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், விதிமீறலில் ஈடுபடும் மருத்துவமனைக்‍கு பொது நலன் கருதி சீல் வைக்க சட்டத்தில் இடமுள்ளது எனவும், சிறுமியிடம் 9 முறை கருமுட்டை எடுக்கப்பட்டது தொடர்பாக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், அரசின் உத்தரவில், கருமுட்டை விற்பனை விவகாரத்தில் அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளதை தனி நீதிபதி புறக்கணித்திருக்கக் கூடாது எனக் கூறினர். மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00