கன்னியாகுமரி அரசு மருத்துவமனை உணவகத்தில் சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, மயக்கம்

Aug 5 2022 3:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உள்ள உணவகத்தில் உணவு சாப்பிட்ட 4 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்த உணவகம் மூடி சீல் வைக்கப்பட்டது.

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திமுக பிரமுகர் கிருஷ்ணகுமார் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த உணவகத்தில் நேற்று உணவு சாப்பிட்ட பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் உணவகத்தில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சிலர் பதறியடித்துக் கொண்டு வெளியேறினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட நான்கு பேரும் அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட உணவகத்தில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சீல் வைத்து மூடினர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஆசாரிபள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும்பாலான உணவகங்கள் இதுபோன்று தரமற்ற முறையில் இயங்கி வருவதாகவும், இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00