அரியலூர்: அறுவடைக்கு தயாராக இருந்த 250 ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

Aug 5 2022 7:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொள்ளிடம் ஆற்றில் அதிகளவிலான உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அரியலூரில் அறுவடைக்கு தயாராக இருந்த 250 ஏக்கர் அளவிலான நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கன அடி உபரி நீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோவிந்தபுத்தூர், அரங்கோட்டை, அணைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் உபரி நீர் தேங்கியுள்ளது. இதனால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 250 ஏக்கர் அளவிலான நெல் பயிர்கள் சேதமடைந்தன. வயல்கள் முழுவதும் நீரில் மூழ்கி இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00