கோவையில் ஆண்களை பாலியல் தொழிலுக்கு அழைத்து பண மோசடி : பெங்களூருவில் பதுங்கியிருந்த 5 பெண்கள் உள்பட 12 பேர் கைது

Aug 5 2022 7:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவையில் டேட்டிங் செயலி மூலம் ஆண்களை பாலியல் தொழிலுக்கு அழைத்து பண மோசடி செய்துவிட்டு பெங்களூருவில் பதுங்கியிருந்த 5 பெண்கள் உள்பட 12 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் அபார்ட்மென்ட்டை சேர்ந்த ஆண்களிடம், பெண்களின் புகைப்படத்தை காட்டி மர்ம நபர்கள் சிலர் பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்த சர்வீஸ் அபார்ட்மென்ட் நிர்வாகி, கோவை மாநகர காவல்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், துணை ஆணையாளர் சிலம்பரசன் தலைமையில் தனிப்படை அமைத்து ஆன்லைன் மூலம் மோசடி செய்து வந்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பெங்களூருவில் இருந்தபடி இணைய தளம் மூலம் ஆண்களை பாலியல் தொழிலுக்கு அழைத்து, பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பெங்களூரு விரைந்த தனிப்படையினர், 5 பெண்கள் உள்பட 12 பேர் கொண்ட கும்பலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 10 சிம்கார்டுகள் மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட கும்பலின் தலைவன் ரிஸ்வான், பெண்களை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்திதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00