காவிரி வெள்ளத்தால் கொள்ளிடம் பகுதியில் நீரில் மூழ்கிய ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் - உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு விவசாயிகள் வேண்டுகோள்

Aug 8 2022 11:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டதால், உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட 2 லட்சம் கனஅடிக்கும் அதிகமான தண்ணீர், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் வழியே கடலில் கலந்து வருகிறது. இதன் காரணமாக சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் ஆற்றின் படுகைக்குள் அமைந்துள்ள முதல்மேடைதிட்டு, நாதல்படுகை, வெள்ளைமணல் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியேறி உள்ளனர். மேலும் மதகுகளை தாண்டி தண்ணீர் வெளியேறியதால் கரையோர கிராமங்களான அனுமந்தபுரம், கோதண்டபுரம் உள்ளிட்ட கிராமங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதால், உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00