கீழடி அகழாய்வு கொந்தகையில் ஈமத்தாழி ஒன்றில் 29 சூதுபவள மணிகள் கண்டுபிடிப்பு

Aug 8 2022 2:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

கீழடி அகழாய்வு கொந்தகையில் ஈமத்தாழி ஒன்றில் 29 சூதுபவள மணிகள் கண்டறியப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7 கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, கொந்தகை அகழாய்வு தளத்தில் நடைபெற்ற 3-ம் கட்ட அகழாய்வு பணியின்போது, ஒரே குழியில் அருகருகே 10 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இது ஆராய்ச்சியாளர்கள் இடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கீழடி, அகரம் மற்றும் கொந்தகையில் தொடர்ந்து அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கீழடியில் இதுவரை மண் பானை, காதில் அணியும் தங்க வளையல், பகடை, நெசவு தொழிலில் பயன்படும் தக்களி, கற்கோடாரி, கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள், மண் குவளைகள், சங்கு வளையல்கள், உறைகிணறுகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. இந்நிலையில், முதன்முதலாக கீழடி அகழாய்வுத் தளங்களில் ஒன்றான கொந்தகையில் ஈமத்தாழி ஒன்றில் இருந்து 29 சூதுபவள மணிகள் கிடைத்துள்ளன. கொந்தகையை பொறுத்தவரை பழந்தமிழர்களின் வாழ்வியலில் ஈமப்பகுதி அதாவது இறந்தவர்களை புதைக்கும் பகுதியாக இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00