மத்திய அரசின் மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்‍கு எதிர்ப்பு : தமிழகத்தில் மின்சார வாரிய ஊழியர்கள் பணிப்புறக்‍கணிப்பு போராட்டம்

Aug 8 2022 3:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய அரசின் மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்‍கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் மின்சார வாரிய ஊழியர்கள் பணிப்புறக்‍கணிப்பு போராட்டம் நடைபெற்றது.

மக்‍களவையில் கடும் எதிர்ப்புக்‍கு இடையே தாக்‍கல் செய்யப்பட்ட மின்சார சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்ற நிலைக்‍குழுவுக்‍கு அனுப்பிவைக்‍கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடியில், தமிழக அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தின் உள்ளே மத்திய அலுவலகம் முன்பு, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பணிப் புறக்‍கணிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள், மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அனல் மின் நிலையத்தில் ஆயிரத்து 50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் மின்சார சட்ட மசோதாவை கண்டித்து தமிழ்நாடு விவசாயம் சங்கம் சார்பில் தூத்துக்‍குடியில், மின்சார சட்ட மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

திருச்சி தென்னூர் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு, மின்வாரிய அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கேங்மேன், மின் ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் என 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற கோஷங்கள் எழுப்பினர்.

மத்திய அரசின் மின்சார சட்டத்திருத்த மசோதாவை கண்டித்து மதுரையில் மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00