சின்னசேலம் மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமின் மனு மீதான விசாரணையை விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் ஒத்திவைப்பு

Aug 10 2022 4:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமின் மனு மீதான விசாரணையை வரும் 18-ம் தேதிக்கு விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் கிருத்திகா, ஹரிப்ரியா உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே 5 பேரும் ஜாமின் கோரி விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி சாந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஐந்து பேருக்கும் ஜாமின் வழங்க மாணவி பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து மனுத் தாக்கல் செய்யபப்பட்டது. இதனை நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட நிலையில், மாணவியின் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகே, ஐந்து பேர் மீதான குற்ற வழக்கு மற்றும் எப்.ஐ.ஆர். பதிவு செய்ய முடியுமென சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழு அறிக்கை வரும் வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என சிபிசிஐடி தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேரின் ஜாமின் மனுக்கள் மீதான விசாரணையை வரும் 18-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00