சென்னையில் வங்கி வாடிக்கையாளர்களின் நிரந்தர வைப்புத் தொகை ரூ.1.23 கோடி கையாடல் : வங்கி மேலாளர், அவரது கணவர் கைது - புழல் சிறையில் அடைப்பு

Sep 22 2022 5:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில், வங்கி வாடிக்கையாளர்களின் நிரந்தர வைப்புத் தொகை, ஒரு கோடியே 23 லட்சம் ரூபாயை கையாடல் செய்த வங்கி மேலாளர் மற்றும் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பஞ்சாப் & சிந்த் வங்கியின் ஜார்ஜ் டவுன் மற்றும் அண்ணா சாலை கிளையின் மேலாளராக, கடந்த 2016 முதல் 2019-ம் ஆண்டு வரை பணிபுரிந்த, அண்ணா நகரைச் சேர்ந்த நிர்மலா ராணி என்பவர், வங்கி வாடிக்கையாளர்களின் நிரந்தர வைப்பு தொகையை தன்னிச்சையாக முடித்து, அந்தத்தொகையை வங்கி கணக்கிலிருந்து தனது பெயரிலான கர்நாடக வங்கி கணக்கிற்கு மாற்றி, சுமார் ஒரு கோடியே 23 லட்சம் ரூபாயை கையாடல் செய்ததாக, மண்டல மேலாளர் திரு.கன்வர்லால் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

விசாரணையில், வங்கியில் தொழிற்கடன் மற்றும் Letter of credit with Bank Guarantee கடன் பெறும் நிறுவனத்தினர், தாங்கள் பெறும் கடன் தொகைக்கு ஏற்ப வங்கியில் நிரந்தர வைப்பு தொகையை வைத்திருப்பர். பின்னர் தங்களது Project முடிந்தவுடன் அந்த வைப்பு தொகையை திரும்பப் பெறுவார்கள். அந்த வகையில், இருந்த வங்கி வாடிக்கையாளர்களின் நிரந்தர வைப்பு தொகை கணக்கிலிருந்து நிர்மலா ராணி கையாடல் செய்தது கண்டுபிடிக்‍கப்பட்டது. இதையடுத்து, நிர்மலா ராணி மற்றும் அவரது கண்வர் இளங்கோவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்‍கப்பட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00