அண்ணாவின் 114-வது பிறந்த நாள் விழா பொதுக்‍கூட்டம் : அ.ம.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்பு

Sep 22 2022 5:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்த நாளையொட்டி, தமிழகம் முழுவதும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தின் சார்பில் பொதுக்‍கூட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பேருந்து நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. கணேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில் மத்தூர் ஒன்றிய செயலாளர் திரு. மோகன் வரவேற்புரை ஆற்றினார். கழக அமைப்பு செயலாளரும், ஆட்சி மன்ற குழு தலைவருமான திரு. ஆர்.ஆர் முருகன், கழக அமைப்பு செயலாளர் திரு. டி.கே.ராஜேந்திரன், தலைமைக் கழக பேச்சாளர் பார்த்திபன், பாஸ்கர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட அமமுக சார்பில், தீவனூரில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் திரு.பாலசுந்தரம், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.அய்யனார், மாவட்ட வர்த்தக அணி துணைத் தலைவர் தீவனூர் திரு. ராமமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் திரு.பார்த்திபன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு.முத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் மாவட்ட, ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள் விழாவையொட்டி நடைபெற்ற அமமுக பொதுக்‍கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் திரு. AGS ஞானசேகர் தலைமையேற்றார். நடைபெற்றதது. இந்த பொது கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் திரு. பாண்டுரங்கன், கழக தேர்தல் பிரிவு செயலாளரும், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளருமான திரு. என்.ஜி. பார்த்திபன் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினர். அதிமுக இடைகால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றது, ஒபிஸ் தன்னுடன் சேர வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றத்தான் என திரு. பாண்டுரங்கன் அப்போது தெரிவித்தார்.

இக்‍கூட்டத்தில், ஆலங்காயம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு. குமார், மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு- முருகேசன், வாணியம்பாடி நகர கழக செயலாளர் திரு. மணிவண்ணன், வழக்கறிஞர் பிரிவின் மாநில துணை செயலாளர் திரு. பாலசுப்ரமணியம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00