திருவாரூர் மாவட்டத்தில் பாசன வாய்க்‍கால் தூர்வாரும் பணியில் ஊழல் - குறுவை-சம்பா நெற்பயிர்களை காப்பாற்றிட சொந்த செலவில் தூர்வாரும் விவசாயிகள்

Sep 23 2022 12:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவாரூர் மாவட்டத்தில் பாசன வாய்க்‍கால் தூர்வாரும் பணியில் நடைபெற்ற ஊழல் காரணமாக, குறுவை-சம்பா நெற்பயிர்களை காப்பாற்றிட விவசாயிகள் தங்களது சொந்த செலவில் தூர்வாரும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள ஓவரூர் வடிகால் மற்றும் வளவானற்றில் பாசனத்திற்கு தண்ணீர் செல்ல முடியாத அளவுக்‍கு ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது. இதனால் தண்ணீர் வடியாமல் வயல்களில் வெள்ள நீர் சூழ்ந்து பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வீட்டுக்கு ஒருவர் என்ற அடிப்படையில், விவசாயிகள் ஒருங்கிணைந்து, குன்னலூர் முதல் கீழப்பெருமலை வரை உள்ள சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு படந்துள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி வருகின்றனர் மேலும் ஜேசிபி வாகனம் ஒன்றையும் கிராம நிதியிலிருந்து வாடகைக்கு பணியமர்த்தி உள்ளனர்.

பாசன ஆறு, வாய்க்கால் வடிகால்கள் தூர்வாரும் பணிக்கு நிதி ஒதுக்கப்படும் போதிலும், அதனை முறையாக பயன்படுத்தாமல் ஆளும் கட்சியினரும், அதிகாரிகளும் கூட்டாக இணைந்து ஊழல் செய்வதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00