கோவையில் பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு; சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் தீவிர விசாரணை

Sep 23 2022 1:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவை மாவட்ட பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியவர்களை போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

கோவை சித்தாபுதூர் பகுதியில் செயல்பட்டு வரும் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில், அடையாளம் தெரியாத சிலர் பீர்பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி வீசிவிட்டுத் தப்பியோடினர். ஆனால், அந்த பாட்டில் வெடிக்‍காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்‍கப்பட்டது. இது குறித்து தகவலறிந்து, சம்பவ இடத்துக்குச் விரைந்த போலீசார் அந்தப் பகுதியில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து, பெட்ரோல் குண்டு வீசியவர்களைக்‍ கைது செய்ய தனிப்படை அமைக்‍கப்பட்டுள்ளது. பாரதீய ஜனதா கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது அப்பகுதி மக்‍களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தப்பட்ட நிலையில் பா.ஜ.க அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு இடத்திலும் ஒப்பணக்கார வீதி மாருதி துணிக் கடை அருகே பெட்ரோல் குண்டு வீச்சு நடந்துள்ளது. இதுகுறித்து கடை உரிமையாளரை அழைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், கோவையில் பதற்றத்தை உருவாக்‍க வேண்டும் என்பதற்காகவே ஒரு தரப்பினர் இது போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00