சீர்காழி அருகே காதலியை அடித்துக்கொன்றுவிட்டு வீட்டில் மறைத்த இளைஞர் : பொதுமக்கள் உதவியுடன் இளைஞரை கைது செய்த போலீஸ்

Sep 23 2022 10:06AM
எழுத்தின் அளவு: அ + அ -

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, தனது காதலியை அடித்துக்‍கொன்றுவிட்டு சடலத்தை வீட்டில் மறைத்த இளைஞரை பொதுமக்‍கள் உதவியுடன் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

சீர்காழி அருகே உமையாள்பதி கிராமத்தை சேர்ந்த நடராஜனுக்‍கும், கீழவாடி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்மணிக்‍கும் கடந்த 20 ஆண்டுகளுக்‍கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 17 மற்றும் 11 வயதில் இரு மகன்கள் உள்ளனர். நடராஜன் மற்றும் மகன்களை பிரிந்து சில வருடங்களாக கீழவாடியில் உள்ள தனது தந்தை வீட்டில் தங்கி கல் அறுக்கும் வேலையில் தமிழ்மணி ஈடுபட்டார். இந்நிலையில், கொள்ளிடம் அருகே உள்ள பாலுரான் படுகை கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்பவருடன் பழக்‍கம் ஏற்பட்டு, கடந்த சில மாதங்களாக இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர்.

இந்நிலையில், மதுபோதையில் இருந்த செந்தில், நடத்தையில் சந்தேகமடைந்து தமிழ்மணியுடன் தகராறில் ஈடுபட்டு தாக்‍கியுள்ளார். இதில் தமிழ்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலையை மறைக்கும் விதமாக தமிழ்மணியின் சடலத்தை வீட்டில் உள்ள பிரிட்ஜ் பக்கவாட்டில் செந்தில் மறைத்து வைத்துள்ளார். வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்‍கம்பக்‍கத்தினர், அதுகுறித்து காவல்துறைக்‍கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் அங்கு போலீசார் வருவதை அறிந்த செந்தில், வீட்டின் பின்பக்கமாக குதித்து அருகில் உள்ள மூங்கில் தோப்பில் புகுந்தார். அவரது வீட்டில் கிடந்த தமிழ்மணியின் சடலத்தை போலீசார் கைப்பற்றி, சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தப்பியோடிய செந்திலை, பொதுமக்கள் உதவியுடன் போலீசார் பிடித்து கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00