கனியாமூர் தனியார் பள்ளி மாணவி சம்பவம் குறித்து பொய்யான தகவல்களை பரப்பியதாக எழுந்த புகார் - யூடியூபர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து புலனாய்வு குழு விசாரணை

Sep 23 2022 11:30AM
எழுத்தின் அளவு: அ + அ -

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி இறப்பு சம்பவம் குறித்து பொய்யான தகவல்களை பரப்பிய யூடியூபர்கள் 5 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த ஜூலை 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டதுடன், கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறை உயரதிகாரிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டது. இதனிடையே, மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக பொய்யான தகவல்களை யூடியூப், வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக பொய்யான தகவல்களை வெளியிட்ட யூடியூபர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நவீன்குமார், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த வடிவேல், சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த முகமது ஷபி, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கோபிநாத், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் ஆகியோர் மீது சைபர் க்ரைம் போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, கள்ளக்குறிச்சியில் உள்ள சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்தில் நேரில் ஆஜரான யூடியூபர்கள் 5 பேரிடமும், போலீசார் விசாரணை நடத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00