கோவையில் பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு கண்டனம் - நள்ளிரவில் பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

Sep 23 2022 1:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவையில் பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை கண்டித்து பாஜகவினர் நள்ளிரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்றிரவு மர்ம நபர்கள் சிலர், பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பிச்சென்றனர். நல்வாய்ப்பாக அந்த பெட்ரோல் குண்டுகள் வெடிக்காததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதுதொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதை அறிந்த பாஜகவினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர், கோவை பாஜக அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, கோவை காந்திபுரம் பகுதியில் நேற்று நள்ளிரவு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00