பொள்ளாச்சியில் பாரதிய ஜனதா நிர்வாகிகளின் வாகனங்களை சேதப்படுத்த முயற்சி - மர்ம நபர்களின் செயலால் பரபரப்பு

Sep 23 2022 1:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மர்ம நபர்கள் சிலர் பாஜக நிர்வாகிகளின் வாகனங்களை உடைத்து சேதப்படுத்தி தீ வைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி குமரன் நகரைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவர் பாரதிய ஜனதா கட்சியின் அமைப்புசாரா தெற்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். இந்தநிலையில், நேற்று நள்ளிரவு தனது வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவரது காரை இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள், பயங்கர ஆயுதங்களால் உடைத்து சேதப்படுத்திவிட்டு தப்பி ஓடினர்.

மேலும் அதே பகுதியை சேர்ந்த சிவா மற்றும் சரவணன் ஆகியோர் வீடுகளுக்கு சென்ற அந்த மர்ம கும்பல், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோக்கள், கார் உள்ளிட்ட வாகனங்களை சேதப்படுத்தி தீ வைக்க முயன்றது. அப்போது அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால் அவர்கள் தப்பியோடிவிட்டனர். இதனை அறிந்த பாரதிய ஜனதா நிர்வாகிகள், குமரன் நகர் முன்பு குவிந்ததால் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00