பர்கூர் அருகே அரசு பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்த விவகாரம் : தமிழ் ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம்

Sep 23 2022 1:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தலைமை ஆசிரியருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில், அரசு பள்ளி மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்யவைத்து வீடியோ எடுத்து வெளியிட்ட தமிழ் ஆசிரியர் ஒருவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பர்கூர் அடுத்த மல்லப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 284 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ வாட்ஸ் அப் குழுக்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்தப் பள்ளியில் நேரடியாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலைக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து மாணவர்களிடம் நடத்திய விசாரணையில், பள்ளியின் தமிழ் பாட முதுகலை ஆசிரியர் அனுமுத்துராஜ் என்பவர், தலைமை ஆசிரியருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில், மாணவர்களை கட்டாயப்படுத்தி கழிவறையை சுத்தம் செய்யவைத்து வீடியோ எடுத்து வெளியிட்டது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து மத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் தமிழ் ஆசிரியர் அனுமுத்துராஜை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00