கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்த செமஸ்டர் தேர்வுக்கான மறு மதிப்பீட்டு முடிவுகள் வெளிவராத நிலையில் நாளை செமஸ்டர் தேர்வு - முடிவுகளை தெரிந்து கொள்ள முடியாமல் மாணவர்கள் குழப்பம்
Sep 23 2022 1:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பல்வேறு கல்லூரிகளில் கடந்த செமஸ்டர் தேர்வுக்கான மறு மதிப்பீட்டு முடிவுகள் வெளிவராதால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பச்சையப்பா கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளுக்கு அண்மையில் செமஸ்டர் தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வில் தேர்ச்சி பெற தவறிய மாணவர்கள் தோல்வியடைந்த பாடங்களுக்கு மறு மதிப்பீட்டிற்காக ஆயிரம் ரூபாய் கட்டணமும், மறுதேர்வு எழுதுவதற்காக 350 ரூபாய் கட்டணமும் செலுத்தி விண்ணப்பித்திருந்தனர். ஆனால், பல மாதங்கள் ஆன பின்னரும் மறு மதிப்பீட்டிற்கான முடிவுகள் இதுவரை வெளிவரவில்லை. இந்தநிலையில், செமஸ்டர் தேர்வுகளுக்கு நாளை மறுதேர்வு நடைபெற உள்ளது. மறுமதிப்பீட்டிற்கான முடிவுகள் வெளியிடப்படாத நிலையில், நாளை மறுதேர்வு நடைபெறுவதால் மாணவர்களிடையே குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.