பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைவதற்கு கிராம மக்கள் நூதன முறையில் எதிர்ப்பு - அரசின் கவனத்தை ஈர்க்க 4 கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவர்களை பள்ளி அனுப்பாமல் போராட்டம்

Sep 23 2022 1:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 4 கிராமங்களை சேர்ந்த மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் அவர்களது பெற்றோர்கள், இன்று கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையின் இரண்டாவது விமான நிலையம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பரந்தூர் பகுதியில் 4 ஆயிரத்து 750 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளதாக மத்திய-மாநில அரசுகள் தெரிவித்திருந்தன. இந்த விமான நிலையம் அமையும்பட்சத்தில் சுற்றுப்பகுதியில் உள்ள 12 கிராமங்கள் பாதிப்புகளுக்குள்ளாக நேரிடும் என்று கூறப்படுகிறது. எனவே, புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 12 கிராம மக்கள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் புதிய விமான நிலையம் அமையவுள்ள பகுதிக்குட்பட்ட இடங்களை சேர்ந்தவர்கள், மாவட்ட ஆட்சியரிடம் தடையில்லா சான்று பெற்று வந்த பிறகே பத்திர பதிவு செய்யப்படும் என்று பதிவு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டதால், அடுத்தகட்ட போராட்டத்தை கிராம மக்கள் முன்னெடுத்துள்ளனர். அதன்படி, எனாபுரம், நெல்வாய், மேலேரி, நாகப்பட்டு ஆகிய 4 கிராமங்களை சேர்ந்த மக்கள், தங்கள் பிள்ளைகளை இன்று பள்ளிக்கு அனுப்பவில்லை. 4 கிராமங்களிலும் உள்ள பள்ளிகளில் 180க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில், நெல்வாய் கிராமத்தில், குறைந்த மாணவர்களே பள்ளிக்கு சென்றனர். மற்ற 3 கிராமங்களில் எந்தவொரு மாணவர்களுமின்றி பள்ளிகள் வெறிச்சோடி காணப்பட்டன. தங்கள் பகுதியில் விமான நிலையம் வேண்டாம் என்று கோஷம் எழுப்பி, மாணவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00