திருச்சி அருகே மது பாருக்‍கு வெளியே இரு தரப்பினர் கோஷ்டி மோதல் : கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழப்பு - சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சம்பந்தப்பட்டவரை தேடி வரும் போலீசார்

Sep 23 2022 3:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி அருகே மது bar-க்‍கு வெளியே இரு தரப்பினரிடையே கோஷ்டி மோதலின் போது ஏற்பட்ட கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் நேற்று இரவு பால் பண்ணை அருகே உள்ள தனியார் மதுபாரில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த வந்துள்ளார். அப்போது அந்த பார் மூடியிருந்தது. பாருக்கு வெளியே நின்று இருந்தபோது செல்வம் தரப்பினருக்கும், வேறொரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. அப்போது எதிர்தரப்பினர் செல்வத்தை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

கத்திக்குத்தில் படுகாயமடைந்த செல்வத்தை அவரது நண்பர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் செல்வம் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்‍கு பதிவு செய்த காந்தி மார்க்கெட் காவல் துறையினர், அந்த பாருக்கு வெளியே இருந்த சிசிடிவி-யில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர். இதன் அடிப்படையில் செல்வத்தை கத்தியால் குத்தியவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00