கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ நடத்தும் தனியார் பள்ளி விதிமீறல் : பள்ளி கழிவு நீரை கால்வாயில் விடுவதற்கு எதிர்ப்பு

Sep 23 2022 5:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டத்தில் கழிவு நீரை கால்வாயில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பள்ளியை விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த திமுகவை சேர்ந்த பேரூராட்சி துணை தலைவர் குண்டர்களுடன் வந்து நடத்திய தாக்‍குதலில் காயமடைந்த விவசாயிகள் மருத்துவமனை​யில் அனுமதிக்‍கப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பேரூராட்சிக்குட்பட்ட கூடை தூக்கி பகுதியில் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ அப்புநடேசன் என்பவருக்கு சொந்தமான தனியார் பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்த பள்ளியிலிருந்து மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறை கழிவுநீர் சிறிய குழாய்கள் மூலம் சாலையோர வடிகாலில் கலக்‍கிறது. இதனால் கழிவுநீர் அப்பகுதியில் உள்ள பட்டணகால்வாயில் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி அப்பகுதியில் பொதுமக்கள் கழிவுகளை வடிகாலில் விட எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து பொதுமக்கள் குலசேகரம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் 2 நாட்களுக்‍கு முன் இப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்‍கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். முன்னாள் எம்எல்ஏ க்கு ஆதரவாக குலசேகரம் பேரூராட்சி துணை தலைவரான திமுகவை சேர்ந்த ஜோஸ்எட்வின், குண்டர்களுடன் வந்து விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த விவசாயிகள் ஜெயசந்திரன், சிசில்ராஜ் உள்ளிட்ட பலர் குலசேகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளனர்.

ஜெயசந்திரன் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்த பட்ட தனியார் பள்ளியின் இயக்குனரும் முன்னாள் எம்எல்ஏவின் மகனுமான ராதாகிருஷ்ணன், குலசேகரம் பேரூராட்சி துணை தலைவரான ஜோஸ் எட்வின், பள்ளி மக்கள் தொடர்பு அலுவலர் ஆன்சியோ உட்பட 5 பேர் மீது குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00