உதகை அருகே உள்ள மேலூர் ஊராட்சி துணைத் தலைவர் நாகராஜ் ஒப்பந்ததாரர்களிடம் 3% கமிஷன் கேட்டு பேசும் வீடியோ வைரல்

Sep 23 2022 5:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மேலூர் ஊராட்சி துணைத் தலைவர் நாகராஜ், ஒப்பந்ததாரர்களிடம் 3 சதவீத கமிஷன் கேட்டு பேசும் வீடியோ வைரலானது.

மேலூர் ஊராட்சியில் 20 லட்ச ரூபாய், 50 லட்ச ரூபாய் போன்ற கட்டுமானப் பணிகளுக்கு மூன்று சதவீதம் கமிஷனை ஊராட்சி மன்ற துணைத் தலைவரான தம்மிடம் கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களை நாகராஜ் வற்புறுத்துகிறார். அதற்கு ஒப்பந்ததாரர்கள் ஏற்கனவே பொறியாளருக்கு ஐந்து சதவீதமும் ஓவர்சீருக்கு 12 சதவீதமும், பிடிஓ, கம்ப்யூட்டர் செக்‍ஷன் உள்ளிட்ட ஒவ்வொருவருக்கும் கமிஷன் கொடுத்த பிறகு தான் பில் தொகையைப் பெற முடிவதாக துணைத் தலைவரிடம் கூறுகின்றனர். இதற்கு துணைத் தலைவர் நாங்கள் ஐம்பதாயிரம் வரை ஒவ்வொரு முறையும் டொனேஷன் கொடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் எங்களுக்கு கொடுக்க வேண்டிய மூன்று சதவீத கமிஷனை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்.

ஒப்பந்ததாரர்கள் அதிகாரிகளுக்கு கொடுக்கும் கமிஷன் சதவீதத்தை ஒப்புதல் வாக்கு மூலமாக துணைத்தலைவரிடம் கூறுவது இவர்கள் செய்யும் பணியின் தரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00