பத்பநாபபுரம் அரண்மனையில் மன்னரின் உடைவாளை ஒப்படைக்‍கும் நிகழ்ச்சி : தமிழக-கேரளா அமைச்சர்கள் பங்கேற்பு

Sep 23 2022 5:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

பத்பநாபபுரம் அரண்மனையில் மன்னரின் உடைவாளை கேரளா அரசு தமிழக அரசிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் தமிழக - கேரளா அமைச்சர்கள் பங்கேற்றனர்.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சுசீந்திரம் முன்னுதித்தநங்கை அம்மன், வேளிமலை குமாரசுவாமி, பத்பநாபபபுரம் சரஸ்வதி அம்மன் விக்​கிரகங்கள் திருவனந்தபுரத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அங்கு பத்து நாட்கள் நவராத்திரிவிழாவில் பூஜையில் வைப்பது வழக்கம். இதற்காக திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சரஸ்வதி அம்மன் உள்ளிட்ட சுவாமி விக்ரகங்கள் நெற்றி பட்டம் சூட்டிய யானைகளுடன் மன்னர்கள் கால பாரம்பரிய முறைப்படி ஊர்வலமாக சென்றது.

இதையடுத்து இன்று பத்பநாபபுரம் அரண்மனையில் மன்னர்கள் பாரம்பரிய முறைப்படி மன்னரின் உடைவாளை கேரளா அரசு தமிழக அரசிடம் ஒப்படைக்கும் உடைவாள் கைமாற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக இந்து அறநிலைத்துறை அமைச்சர் திரு. சேகர்பாபு கேரளா தேவசம்போராட்டு அமைச்சர் திரு. ராதாகிருஷ்ணன், தேவசன்போர்டு தலைவர் ​திரு. அனந்தகோபன் குமரி மாவட்ட ஆட்சியர் திரு. அரவிந்த், காவல் கண்காணிப்பாளர் திரு. ஹரிகிரண்பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து குழித்துறை மஹாதேவர் கோவிலில் தங்கும் சாமி சிலைகள், நாளை காலை தமிழக கேரளா எல்லையான களியக்காவிளையில் கேரளா அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00