அரசு விழாவில் பெண்களை பார்த்து ஓசி பஸ்ஸில் பயணிப்பவர்கள் என உயர்கல்வித்துறை அமைச்சர் பேசியது அதிர்ச்சி அளிக்கிறது - அமைச்சரின் பேச்சுக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்

Sep 26 2022 12:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

அரசு விழாவில் பங்கேற்ற பெண்களைப் பார்த்து 'ஓசி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள்' என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பேசியிருப்பதற்கு அம்மா மக்‍கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அரசு விழாவில் பங்கேற்ற பெண்களைப் பார்த்து 'ஓசி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள்' என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பேசியிருப்பதாக வெளியாகியுள்ள காணொலி அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். அமைச்சரின் இந்தப் பேச்சு கண்டனத்திற்குரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பெண்கள் இலவசமாக அரசுப் பேருந்தில் பயணிக்கும்போது ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், அவர்களை ஏளனமாக பேசக்கூடாது என முதலமைச்சர் திரு.ஸ்டாலின் கூறியிருந்ததை சுட்டிக்‍காட்டியுள்ள திரு. டிடிவி தினகரன், இது அவர்களுக்கு மட்டும்தான் பொருந்துமா? அமைச்சர்களுக்குப் பொருந்தாதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மூத்த அமைச்சர் ஒருவரே இப்படி பேசுகிறார் என்றால் தி.மு.க.வினரின் உண்மையான மனநிலை எது என்பதை நம்மால் உணர முடிகிறது என்றும் பெண்களை இப்படி இழிவுபடுத்துவதும் தி.மு.க.வினர் கண்டுபிடித்திருக்கும் திராவிட மாடலின் அங்கம்தானோ?! என்றும் திரு. டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00