சேலத்தில் ஆன்லைன் ரம்மி மூலம் ரூ.20 லட்சத்திற்கு மேல் பணத்தை இழந்த இளைஞர் - கடனையும் கட்ட முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

Sep 26 2022 5:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

சேலத்தில் ஆன்லைன் ரம்மி மூலம் 20 லட்சத்திற்கு மேல் பணத்தை இழந்த இளைஞர், கடனை கட்ட முடியாமல் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள தின்னப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 32 வயதான சதீஷ்குமார் என்பவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு திவ்யா என்ற மனைவியும், 6 வயதுடைய மகனும் உள்ளனர். இந்நிலையில், சதீஷ்குமார் கடன் வாங்கி ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடியதில் சுமார் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் இழந்துள்ளார். மேலும், ஆன்லைன் மூலம் கடன் அளிக்கும் ஆப்கள் மூலமாகவும் கடன் பெற்றதாகக் கூறப்படுகிறது. கடனில் 15 லட்சம் ரூபாய் வரை அடைதுள்ளதாக சொல்லப்படுகிறது. வாங்கிய பணத்தை விட பல மடங்கு அதிகமாக பணம் கட்டிய பிறகும், தினமும் சதீஷ்குமாரை போனில் அழைத்து தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த சதீஷ்குமார், மனைவி மற்றும் மகனை அழைத்து கொண்டு ஓமலூர் தனியார் ஓட்டலில் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். இதனால், மூன்று பேரும் அறையிலேயே மயங்கி கிடந்துள்ளனர். இது குறித்து தகவறிந்த போலீசார், உடனடியாக அவர்களை மீட்டு ஓமலூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00