பொள்ளாச்சியில் பாஜகவினர், இந்து முன்னணியினர் வாகனங்களுக்கு தீ வைத்த சம்பவம் : 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை

Sep 26 2022 6:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

பொள்ளாச்சியில் பாஜக-வினர் மற்றும் இந்து முன்னணியினர் வாகனங்களை உடைத்து தீ வைத்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகரைச் சேர்ந்த பாஜக நிர்வாகி பொன்ராஜ் என்பவரின் காரை கடந்த 23-ம் தேதி மர்ம நபர்கள் உடைத்து தப்பிச் சென்றுள்ளனர். மேலும், அதே பகுதியில் இந்து முன்னணியைச் சேர்ந்த சிவா, சரவணன் ஆகியோர் வீடுகளுக்குச் சென்ற அந்த கும்பல் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோக்கள் மற்றும் கார் மீது ஆயுதங்களால் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். மேலும், பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையில் பாஜக நிர்வாகி கடையில் டீசல் பாக்கெட் வீச முயன்ற வழக்கில், எஸ்டிபிஐ நிர்வாகி ஒருவர் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் கூறினார். தனது அலுவகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00