தமிழகத்தில் தொடரும் லாக்கப் மரணங்கள் - காவல்நிலைய கழிவறையில் குற்றவாளி தூக்‍கிட்டுத் தற்கொலை

Sep 26 2022 6:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி சமயபுரம் காவல்நிலையத்தில் குற்றவாளி ஒருவர் தூக்‍கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் காமராசவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவர் மீது ஏற்கனவே தாயை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வழக்‍கில் பிடிவாரண்ட் கொடுக்கப்பட்டு போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார். இந்நிலையில், சமயபுரம் கோயிலில் பக்தர்களிடம் செல்போன் திருடியதாக எழுந்த புகாரில், முருகானந்தத்தை கோயில் காவலர்கள் பிடித்து, சமயபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

காவல்நிலையத்தில் உள்ள கழிவறைக்‍குச் சென்ற முருகானந்தம், நீண்ட நேரமாகியும் வராததால் அங்கு சென்று பார்த்தபோது, அவர் அரைநாண் கயிற்றில் தூக்‍கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்நிலையத்தில் குற்றவாளி தூக்‍கிட்டுத் தற்கொலை செய்தது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00