சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்‍கு : காவல் ஆய்வாளர், பா.ஜ.க. நிர்வாகி உட்பட 13 பேருக்‍கு தலா 20 ஆண்டுகள் சிறை

Sep 26 2022 6:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்‍கு ஆளாக்‍கிய வழக்‍கில், காவல் ஆய்வாளர், பா.ஜ.க. நிர்வாகி உட்பட 13 பேருக்‍கு, தலா 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, சென்னை போக்‍சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையில் 15 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கிய வழக்கில் அவரது உறவினர்கள், உடந்தையாக இருந்த எண்ணூர் காவல் ஆய்வாளர் புகழேந்தி, பா.ஜ.க பிரமுகர் ராஜேந்திரன் உள்ளிட்ட 26 பேர் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வண்ணாரப்பேட்டை காவல் நிலைய வழக்கில் 22 பேர் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இரு பெண்கள் உள்பட மற்ற 4 பேர் தலைமறைவாகி விட்டனர். மீதமுள்ள 22 பேர் மீதான வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில், மாரீஸ்வரன் என்பவர் உயிரிழந்தார்.

21 பேருக்கு எதிரான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட 8 உறவினர்கள், அனிதா என்கிற கஸ்தூரி, பாஜகவை சேர்ந்த ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் புகழேந்தி உள்ளிட்ட 21 பேர் குற்றவாளிகள் என நீதிபதி எம். ராஜலட்சுமி கடந்த 15-ம் தேதி அறிவித்தார். இந்நிலையில், தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்‍கப்பட்டன. அதில், சிறுமியின் சித்தி, சித்தப்பா உள்பட உறவினர்கள் 8 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஆய்வாளர் புகழேந்தி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஆய்வாளருக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், பா.ஜ.க பிரமுகருக்கு 50 ஆயிரம் ரூபாயும் உள்பட 21 குற்றவாளிகளுக்கும் சேர்த்து 7 லட்சத்து ஓராயிரம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அந்த தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க உத்தரவிட்டார். இது தவிர, பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாயை இழப்பீடாக பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00