மதுரையில் ஆவின் பெண் முகவரை மிரட்டிய வாகன ஒப்பந்ததாரர் : அதிகாரிகள், ஊழியர்களுக்‍கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல்

Sep 26 2022 6:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில், ஆவின் பெண் முகவரை, தி.மு.க.வைச் சேர்ந்த ஆவின் வாகன ஒப்பந்ததாரர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை புதுவிளாங்குடி செம்பருத்திநகர் 4-வது தெரு பகுதியில் உள்ள காயத்ரி என்ற முகவருக்கு சொந்தமான ஆவின் டெப்போவில், பால் பாக்கெட்டுகளை நேரடியாக விநியோகம் செய்யாமல், அருகில் உள்ள பகுதிகளில் வந்து விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு வாகன ஒப்பந்ததாரர், சாலை பழுதடைந்த நிலையில் உள்ளதாகக்‍ கூறியுள்ளார்.

இதனையடுத்து அங்கு சென்று பால் பாக்கெட்டுகளை பால்டப்பாவுடன் காயத்ரி எடுத்து வந்துள்ளார். பால் டப்பாக்களை ஏன் எடுத்துச் சென்றீர்கள் எனவும், பால் டப்பாக்ககளை திரும்பத்தர வேண்டும் என்றும், வாகன ஒப்பந்ததாரர் நாகேந்திரன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டுள்ளார். ஒப்பந்தபடி டெப்போவிற்கு வந்துதான் பால் டப்பாக்களை எடுத்துச்செல்ல வேண்டும் என்று, பால் டப்பாக்களை ஒப்படைக்காவிட்டால் கையை வெட்டிவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

மதுரை ஆவினில் தி.மு.க.வை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் அதிகாரிகளை மிரட்டுவது தொடங்கி, பால் முகவர்களை மிரட்டுவது என அராஜகத்தில் ஈடுபடுவதாகவும், பால் பாக்கெட்டுகளை கணக்கு காட்டாமல் எடுத்து செல்வது போன்ற முறைகேடுகளும் அரங்கேறி வருகின்றன. இதனால் ஆவின் நிர்வாகத்தில் உள்ள முறைகேடுகளை தடுத்து அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00