குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவில் சினிமா, டிவி மற்றும் நாடக நடிகர்கள் பங்கேற்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி

Sep 26 2022 6:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவில் சினிமா, டிவி மற்றும் நாடக நடிகர்கள் பங்கேற்க அனுமதி அளித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் உலக பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோயில் அமைந்துள்ளது. வடமாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் இந்த கோயிலில்தான் தசரா திருவிழா நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்தநிலையில், திருச்செந்தூரைச் சேர்ந்த கண்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளைகள் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் கலந்து கொள்ள இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தசரா திருவிழாவில் சினிமா, டிவி மற்றும் நாடக நடிகர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு, சினிமா, டிவி, நாடக நடிகர்கள் பங்கேற்கலாம் என்றும், ஆடல், பாடல், கலை நிகழ்ச்சிகள் அனைத்தையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். தசரா திருவிழாவின் போது ஊருக்கு உள்ளே, வெளியே எந்த ஒரு பகுதியிலும் ஆபாச நடனம் ஆட அனுமதி இல்லை என்றும், ஆபாச நடனங்கள் இடம்பெற்றால் சினிமா நடிகர்களுக்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் அபராதம் விதிக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00