சென்னை அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த வீட்டை முன்​விரோதத்தால் இடித்து தரை மட்டமாக்‍கிய விவகாரம் - திமுகவை சேர்ந்த 8 பேர் கைது

Oct 6 2022 3:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

செங்கல்பட்டு மாவட்டம் கொளப்பாக்‍கம் அருகே புதிதாக கட்டி வந்த வீட்டை முன்​விரோதம் காரணமாக ஜே.சி.பி.இயந்திரம் கொண்டு இடித்து தரை மட்டமாக்‍கிய விவகாரத்தில் திமுகவை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொளப்பாக்கம் ஊனைமாஞ்சேரி காந்தி தெருவில் தங்கம் என்பவர் வசித்து வருகிறார். அவரது இடம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் அந்த இடத்தின் உரிமையாளரான அவர் வீடு கட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த தி.மு.க., பிரமுகர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் தங்கம் கட்டி வந்த வீட்டை ஜே.சி.பி . இயந்திரம் கொண்டு வந்து இடித்துள்ளனர். அத்துடன் தங்கம் மற்றும் அவரது வீட்டில் உள்ளவர்களுக்‍கு ​கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது, இது குறித்து புகாரின் பேரில் வழக்‍கு பதிவு செய்த ஓட்டேரி போலீசார், இது தொடர்பாக பிரச்னையில் ஈடுபட்ட வீர மூர்த்தி, பிரகாஷ், வினோத், ராமதாஸ், துரை, உசேன், ரிஷி உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இப்பிரச்னை தொடர்பாக தலைமறைவான மேலும் 4 பேரை தேடி வருகின்றனர். மேலும் ஜே.சி.பி. இயந்திரத்தின் ஓட்டுநரையும் போலீசார் தேடி வருகின்றனர். இடிக்கப்பட்ட கட்டடத்தின் மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00