நாமக்கல் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி பார்களில் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மது விற்பனை : போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

Oct 6 2022 6:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்று வருவதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே, ஓடப்பள்ளி அரசு மதுபான கடை அருகே உள்ள மது பான பாரில், சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறது. மதுபான கடை திறப்பதற்கு முன்பு சட்டவிரோதமாக பார்களிலும் மது விற்பனை நடைபெறுகிறது. இது தொடர்பாக பள்ளிபாளையம் காவல்நிலையத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளான காவேரி, கீழ் காலனி, பள்ளிபாளையம் நகர பகுதி உள்ளிட்ட இடங்களில் அரசு அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுவதால், பாதிக்கப்படுவதாக பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சட்டவிரோதமாக மது விற்பனை குறித்து, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00