தீபாவளி தினத்தன்று ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலையை புகைப்படம் எடுத்தவர்களில் ஒருவர் முகமது ஷாரிக்... கால்டாக்சி ஓட்டுநர் ஆனந்த் அதிர்ச்சித் தகவல்

Nov 24 2022 1:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோவையில் தீபாவளி தினத்தன்று ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலையை சிலர் புகைப்படம் எடுத்ததை பார்த்ததாக டாக்ஸி ஓட்டுநர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த 19-ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது தொடர்பாக, மங்களூரு போலீஸார் 7 தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில், குக்கர் குண்டுடன் ஆட்டோவில் பயணித்த முகமது ஷாரிக், தனது மத அடையாளத்தை மறைத்து செயல்பட்டதுடன், போலி ஆதார் அட்டை மூலம் சிம் கார்டு வாங்கியதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், முகமதுஷாரிக் தனது வாட்ஸ் அப் DP யில் ஈஷா ஆதியோகி சிலை வைத்திருந்ததாக இரு தினங்களுக்கு செய்தி வெளியானது. இது குறித்து போலீசாருக்‍கு தகவல் அளித்துள்ள ஓட்டுநர் ஆனந்த் என்பவர், தீபாவளி தினத்தன்று ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலையை சிலர் புகைப்படம் எடுத்ததை பார்த்ததாக கூறியுள்ளளர். புகைப்படம் எடுத்த நபர்களில் ஒருவர் முகமது ஷாரிக்கை போல இருந்ததாகவும், தலையில் குல்லா அணிந்து இருந்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்றிரவு ஆனந்திடம் விசாரணை நடத்திய போலீசார், தீபாவளி தினத்தன்று முகமது ஷாரிக் பயன்படுத்திய மொபைல் கர்நாடக மாநிலத்தில் இருந்ததை உறுதி செய்துள்ளனர். எனினும் கால் டாக்ஸி ஓட்டுநர் ஆனந்த் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00