நாமக்‍கல் கோகுல்ராஜ் கொலை வழக்கு : உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் முன்பு சுவாதி ஆஜர்

Nov 25 2022 3:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தையே உலுக்கிய கோகுல்ராஜ் கொலை வழக்கில், சுவாதி பிறழ்சாட்சியாக மாறிய நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கொலை வழக்கின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக சிசிடிவி காட்சி உள்ள நிலையில், அந்த காட்சியில், கோகுல்ராஜூடன் இருக்கும் பெண், தாம் கிடையாது என சுவாதி கூறி இருப்பது அதிர வைத்துள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த 2015-ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவர் சுவாதி என்ற இளம்பெண்ணை காதலித்ததாகவும், இந்த விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதாக பதிவான வழக்கு, உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. விசாரணை முடிவில், இந்த வழக்கில் கைதான யுவராஜ், அருண், குமார் உள்ளிட்ட 10 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்தும், 5 பேரை விடுதலை செய்தும் கடந்த மார்ச் மாதம் 8-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர். இதை அடுத்து இந்த வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதி, இன்று நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். காவல்துறை பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட அவரிடம் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கோகுல்ராஜ் கல்லூரியில் தன்னுடன் பயின்றவர் என்று கூறிய சுவாதி, சகமாணவரைப் போல கோகுல்ராஜைத் தெரியும் என்றும் அவர்களோடு பேசுவது போல, கோகுல்ராஜிடமும் பேசியுள்ளேன் என்றும் தெரிவித்தார். கோகுல்ராஜ், வசதி குறைந்த வகுப்பைச் சேர்ந்தவர் என தெரியுமா? என்று நீதிபதிகள் கேட்ட போது, தெரியாது என சுவாதி கூறினார். சம்பவத்தன்று நடைபெற்றது என்ன என கேட்ட நீதிபதிகள், 7 ஆண்டுகள் ஆகிய நிலையில் தங்களுக்கு நினைவிருக்க வாய்ப்பில்லை என்பதால், தேவையானவற்றை நாங்கள் நியாபகப்படுத்துகிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர். அன்று காலை யாரையும் பார்க்கவில்லை என்று சுவாதி கூறவே, நீங்களாக உண்மையைச் சொல்லவில்லை என்றால் அது தொடர்பான வீடியோவை போட்டுக்காண்பித்து, பொய் சொல்லியதாக நடவடிக்கை எடுக்கலாம் எனவும் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் உள்ளது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். அப்போது வீடியோவில் இருப்பது நானல்ல என சுவாதி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதனை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர். மூன்று முறைக்கும் மேலாக அந்த பெண் யாரென தெரியவில்லை என சுவாதி கூறியதால், உண்மையை மனசாட்சிக்கு உட்பட்டு சொல்லுங்கள் என நீதிபதிகள் கூறினர். அதற்கு சுவாதி கண்கலங்கினார். வீடியோவில் அந்த பெண் உடன் இருக்கும் பையன் யார் என மீண்டும் நீதிபதிகள் கேட்டனர். கோகுல்ராஜ் போல தெரிவதாக சுவாதி கூறவே, அப்படி என்றால் அந்த பெண் நீங்கள் இல்லையா என நீதிபதிகள் மீண்டும் வினவினர். மூன்று முறை நீதிபதிகள் கேட்டபோதும், அந்த பெண் யார் என தெரியவில்லை என சுவாதி கூறிவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00