நீலகிரி மாவட்ட ஆட்சியருக்‍கு எஸ்.எம்.எஸ். மூலம் வெடிகுண்டு மிரட்டல் : டெல்லியைச் சேர்ந்த நபர் தஞ்சையில் கைது

Nov 26 2022 1:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்ட ஆட்சியரின் தொலைபேசி எண்ணிற்கு குறுந்தகவல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை தஞ்சையில் போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஜூலை மாதம் மர்ம நபர் ஒருவர், செல்போன் மூலம் நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு குறுந்தகவல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியர் பங்களா, அலுவலகம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டது. அன்றைய தினம் போலீசார் தீவிர சோதனையும், வாகன சோதனையும் நடத்தினர். உதகை காபி ஹவுஸ், சேரிங்கிராஸ் போன்ற இடங்களில் வாகன சோதனை நடந்தது.

பின்னர் மிரட்டல் விடுக்கப்பட்ட எண்ணை கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் தஞ்சாவூர் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து உதகை போலீசார் தஞ்சாவூர் சென்று அவரை கைது செய்தனர்.

பின்பு அவர் உதகைக்கு கொண்டுவரப்பட்டு இரண்டு நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர் டெல்லியை சேர்ந்த நிதின் சர்மா என்பதும், சென்னை, நீலகிரி, டெல்லி போன்ற இடங்களில் சில நாட்கள் அவர் தங்கியிருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. அந்த இளைஞரிடம் போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00