தியாகத்தின் மொத்த திரு உருவம், தனது சகோதரி தான் என திவாகரன் பெருமிதம் - கல்லூரி விழாவில் தனது சகோதரி பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஆனந்தம்

Jan 24 2023 1:41PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெண்கள் எதைக் கண்டும் அஞ்சாமல், தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரியின் 27ம் ஆண்டு நிறுவன தினம் மற்றும் நுண்கலை வார விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பங்கேற்று விழாவை சிறப்பித்தார். இதில் பேசிய அவர், பொருளாதாரத்திலும், சமூக ரீதியிலும் பின்தங்கியவர்கள் பயிலும் வகையில் செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை கல்லூரி சேவை ஆற்றி வருவதாக பெருமிதம் தெரிவித்தார். இக்கல்லூரியில் பயின்ற 90 சதவிகிதம் பேர் முதல் தலைமுறை பட்டதாரி என்பதில் தாம் மிகவும் பெருமிதம் கொள்வதாகவும் சின்னம்மா குறிப்பிட்டார்.

முன்னதாக கல்லூரியின் தலைவர் திரு.திவாகரனும் விழாவில் பங்கேற்று பேசினார். தியாகத்தின் மொத்த திருவுருவமாக இருக்கக்கூடிய தனது சகோதரி இந்த நிகழ்வில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டார். அவருடன் சேர்ந்து தனது அன்னைக்கு மரியாதை செலுத்துவது மிகப்பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.

இதேபோல் செங்கமலத்தாயார் கல்லூரியின் correspondent பொறுப்பில் இருக்கும் திரு.ஜெய் ஆனந்தும் இவ்விழாவில் பங்கேற்று பேசினார். தமிழக மாணவர்களின் நலன் கருதி விலையில்லா சைக்கிள், லேப்டாப் போன்ற பல்வேறு உதவிகளை வழங்கிய மாண்புமிகு அம்மாவுடன் இருந்த சின்னம்மா இவ்விழாவில் பங்கேற்றது சிறப்புமிக்க ஒன்று என அவர் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00