திராவிட மாடல் என பரிச்சயமாக அழைக்கப்படும் சூழலில், மாடல் என்ற ஆங்கிலச் சொல்லிற்கு தமிழ் சொல் என்ன? : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

Jan 24 2023 4:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

தனியார் நிறுவனங்களின் பெயர்ப்பலகை தொடர்பான வழக்கில், அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தொழிலாளர் நலத்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில், தூய தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத பண்பாட்டுத்துறை செயலர் மீது, நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜெயச்சந்திரன் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ் வளர்ச்சிக்கு அனைத்து துறையினரும் கடுமையாக பாடுபட வேண்டும் என்றும், திராவிட மாடல் என்ற சொல் பரிச்சயமானாலும், மாடல் என்ற ஆங்கிலச் சொல்லிற்கு பதிலாக, முற்றிலும் தமிழிலேயே பயன்படுத்தலாமே? எனவும் நீதிபதிகள் கூறினர்.

ஆங்கிலத்தில் மட்டும் பெயர் பலகை வைத்துள்ள நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, தொழிலாளர் நலத்துறை செயலர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிப்ரவரி 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00