திண்டுக்கல்: உலகம்பட்டியில் ஜல்லிக்கட்டிலிருந்து உரிமையாளர்களிடம் சிக்காமல் தப்பி வந்த ஜல்லிக்கட்டு காளை
Jan 24 2023 5:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் உலகம்பட்டி ஜல்லிக்கட்டிலிருந்து, உரிமையாளர்களிடம் சிக்காமல் தப்பி வந்த ஜல்லிக்கட்டு காளை, ஒரு கார் மற்றும் 2 இளைஞர்களை முட்டித் தள்ளிவிட்டு, தம்மனம்பட்டி என்ற இடத்தில் பிடிபட்டது. கொசவபட்டியை சேர்ந்த தாஸ் என்பவரின் கரிகாலன் என்ற காளை களத்தில் இறக்கப்பட்டது. வீரர்களிடம் சிக்காமல் தப்பித்து தலை தறிக்க ஓடிய காளை, வரும் வழியில் ஒரு காரின் மீது மோதிவிட்டு, தன்னை பிடிக்க வந்த இளைஞர்களையும் முட்டித் தள்ளிவிட்டு வேடசந்தூர் அருகே உள்ள தம்மனம்பட்டிக்குள் நுழைந்தது. ஒரு கம்பி வேலி போட்ட காட்டிற்குள் நுழைந்ததால், வெளியே வராமல் கயிறை கட்டி பொதுமக்கள் தடுத்தனர். காளையை பராமரிக்கும் இளைஞர்கள் போராடி லாவகமாக அதனை பிடித்துச் சென்றனர்.