அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திருக்கோயிலூர் சட்டமன்ற தொகுதியில் இன்று புரட்சிப்பயணம் -கழக நிர்வாகிகள், முன்னோடிகள், தொண்டர்கள், இளம் தலைமுறையினர், தாய்மார்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டுகோள்
Jan 25 2023 9:45AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருக்கோயிலூர் சட்டமன்ற தொகுதியில் இன்று அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா புரட்சிப்பயணம் மேற்கொள்கிறார்.
தமிழக மக்களின் உரிமைகளை காப்பாற்றிடவும், திமுக ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு தோலுரித்து காட்டிடவும், பெண் இனத்தின் பாதுகாப்பை பேணிக் காத்திடவும், அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, திருக்கோயிலூர் சட்டமன்ற தொகுதியில் இன்று தனது புரட்சிப் பயணத்தை தொடர்ந்து மேற்கொள்கிறார். இன்று நண்பகல் 12.30 மணிக்கு தஞ்சாவூர் அருளானந்தம் நகர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு, பெரம்பலூர் பைபாஸ் சாலை வழியாக அரசூர் கூட்டுச்சாலை சென்றடைந்து, மாலை 4 மணியளவில் புரட்சிப் பயணத்தை தொடங்கும் புரட்சித்தாய் சின்னம்மா, வளையம்பட்டு, மேலமங்கலம், செம்மார், ஏனாதிமங்கலம், சிறுவானூர், ஏமப்பூர், திருவெண்ணைநல்லூர் பேரூராட்சி பகுதிகளில் தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திக்க இருக்கிறார். சின்னம்மா மேற்கொள்ளும் இந்தப் புரட்சிப்பயணத்தில் கழக நிர்வாகிகள், முன்னோடிகள், தொண்டர்கள், இளம் தலைமுறையினர், தாய்மார்கள், ஜாதி, மத, பேதமின்றி திரளாக கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.