கன்னியாகுமரி வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு - குடியரசு தலைவராக பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது முறையாக தமிழகம் வருகை

Mar 18 2023 2:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒரு நாள் பயணமாக கன்னியாகுமரி வந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, ராமாயண கண்காட்சி கூடம் உள்ளிட்டவற்றை பார்வையிட்ட பிறகு திருவனந்தபுரம் புறப்பட்டார்.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கேரளா வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அங்கிருந்து ஒரு நாள் பயணமாக இன்று கன்னியாகுமரி வந்தார். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரியில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகை முன்பு உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்திறங்கிய அவருக்‍கு, ஆளுநர் ஆர்.என். ரவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதையடுத்து சாலை மார்க்‍கமாக காரில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்திற்கு சென்று, அங்கிருந்து தனி படகு மூலம் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டார். அங்குள்ள சுவாமி விவேகானந்தர் சிலைக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் படகுமூலம் கரை திரும்பிய குடியரசு தலைவர் கார் மூலம் விவேகானந்த கேந்திர வளாகத்திற்கு சென்றார். அங்குள்ள ராமாயண கண்காட்சி கூடத்தினை பார்வையிட்ட அவர் பாரதமாதா கோவிலில் வழிபாடு செய்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு திரும்பிய குடியரசுத் தலைவர் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்றடைந்தார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வருகைகையொட்டி, ஆழ்கடல் பகுதி கடலோர காவல் குழுமத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. ஆரோக்கியபுரம் முதல் கேரள எல்லையான நீரோடி வரை கடலோர பாதுகாப்பு குழுமத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00