சுவாமி விவேகானந்தரின் நினைவு மண்டபம் ஆன்மீகத்தின் சின்னமாகத் திகழ்கிறது... பார்வையாளர்கள் பதிவேட்டில் தனது அனுபவத்தை பதிவு செய்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
Mar 19 2023 1:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சுவாமி விவேகானந்தரின் நினைவு மண்டபம் ஆன்மீகத்தின் சின்னமாக திகழ்வதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கருத்து தெரிவித்துள்ளார். ஒரு நாள் சுற்றுப்பயணமாக கன்னியாகுமரி வருகை தந்த அவர், கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தரின் நினைவு மண்டபத்திற்கு சுற்றுலா படகில் சென்று பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்த பார்வையாளர்கள் பதிவேட்டில் தனது கருத்தை பதிவு செய்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, சுவாமி விவேகானந்தரின் நினைவு மண்டபம் ஆன்மீகத்தின் சின்னமாக திகழ்வதாகவும், விவேகானந்தரின் மகத்தான பணியை இந்த இடத்தில் வந்து உணர்ந்ததை நான் பாக்கியமாக கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இங்கு வந்தது தனக்கு மறக்க முடியாத அனுபவமாக உள்ளதாகவும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.