தருமபுரி அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த காட்டு யானையின் உடல் நல்லடக்கம் - சம்பவ இடத்திலேயே உடற்கூறு ஆய்வு செய்து அடக்கம் செய்த வனத்துறை

Mar 19 2023 1:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

தருமபுரி அருகே கடந்த 40 நாட்களாக தனது நண்பனை தேடி அழைந்த காட்டு யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பகுதிகளில் விவசாய பயிர்களை சேதப்படுத்திய மக்னா யானையை, வனத்துறையினர் சின்னத்தம்பி என்ற கும்கி யானை உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்து முதுமலைக்கு கொண்டு சென்றனர். இதனால், தனது நண்பணான மக்னா யானையை தேடி ஆண் யானை ஒன்று பாலக்கோடு, பாப்பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இரவு பகலாக சுற்றித்திரிந்து வந்தது. இந்நிலையில் விவசாய நிலத்தில் இருந்து ஏரிக்கரையின் மீது ஏறும் போது தாழ்வாக இருந்த மின் கம்பி உரசியதால் மின்சாரம் தாக்கி ஆண் யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் குழு, சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்து யானையின் உடலை நல்லடக்கம் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00