ஓசூரில் சிற்ப கலைக்கூடத்திற்குள் நுழைந்த நாகப்பாம்பை கடித்து குதறிய நாய்... சீறிய பாம்பை நாய் கடித்தே கொல்லும் சிசிடிவி காட்சி வெளியானது
Mar 19 2023 3:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சிற்ப கலைக்கூடத்திற்குள் புகுந்த நாகப் பாம்பை வளர்ப்பு நாய் கடித்தே கொன்ற வீடியோ வைரலாகி வருகிறது. சீதாராம் நகர் பகுதியில் உள்ள ரிங் ரோடு அருகே ஸ்ரீ வைஷ்ணவி சிற்ப கலைக்கூடம் செயல்படுகிறது. அந்த கூடத்திற்குள் இன்று நாகப் பாம்பு ஒன்று நுழைந்தது. இதனை கவனித்த வளர்ப்பு நாய் பாம்புடன் ஆக்ரோஷமாக சண்டையிட்டது. பாம்பின் சீற்றத்தை கண்டு அஞ்சாமல் வெறித்தனமாக சண்டையிட்ட நாய் விஷப்பாம்பை கடித்தே கொன்றது. பாம்பு இறந்த பின்புதான் நாய் சாந்தமடைந்தது.