வெகு விமர்சையாக நடைபெற்ற குன்னங்கண்மாய் மீன்பிடித் திருவிழா - ஏராளமான கிராமமக்கள் 4 கிலோ வரை மீன்பிடித்து மகிழ்ச்சி
Mar 19 2023 4:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள குன்னங்கண்மாயில், மீன்பிடித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சுற்றுப்புர கிராமமக்கள், கட்சா, வலை, கூடையுடன் காத்திருக்க, ஊர் அம்பலம் துண்டை கொண்டு சைகை காட்டியவுடன், அனைவரும் உற்சாகத்துடன் இறங்கி மீன்பிடித்தனர். சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று, கெண்டை, விரால், பாப்லட், கட்லா போன்ற மீன்களை பிடித்தனர். அனைவருக்கும் 4 கிலோவுக்கும் குறையாமல் மீன்கள் கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.