பருவமழை ஏமாற்றியதால் பாபநாசம் காரையார் அணையின் நீர்மட்டம் 25 அடியாக கிடுகிடுவென சரிந்தது

Mar 25 2023 3:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

பருவமழை ஏமாற்றியதால் நெல்லை மாவட்டம் பாபநாசம் காரையார் அணையின் நீர்மட்டம் 25 அடியாக கிடுகிடுவென சரிந்தது. மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள காரையார் அணை நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்பட தென்மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் காரையார் அணையில் தற்போது சுமார் 25 அடி மட்டுமே உள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 24 கனஅடியாக உள்ள நிலையில், 200 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் அணையில் இருந்து வரும் நீர் ஏப்ரல், மே மாதம் வரை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யுமா என்பது சவாலான காரியமாக உள்ளது. மேலும் பருவ சாகுபடி உள்ளிட்டவையும் கோடை மழையை எதிர்நோக்கியே உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00