தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய நில அளவையர் தேர்வில் முறைகேடு - காரைக்குடியில் ஒரே மையத்திலிருந்து 700-க்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றதால் பிற தேர்வர்கள் அதிர்ச்சி

Mar 26 2023 3:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய நில அளவையர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. காரைக்குடியில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய ஏராளமானோர் தேர்ச்சிபெற்றதால் பிற தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த ஆண்டு நவம்பரில் நில அளவர் மற்றும் வரைவாளர் தேர்வு நடைபெற்றது. ஆயிரம் காலிப்பணியிடங்கள் அறிவிக்‍கப்பட்டு நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியானது. கலந்தாய்வு முடிந்து தேர்வு செய்யப்பட்டவர்களின் பதிவெண்கள் தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில், சிவகங்கை மாவட்டம் காரைக்‍குடியில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் ஏராளமானோர் தேர்ச்சி பெற்ற சம்பவம் பிற தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தேர்வு எழுதியவர்களின் எண்களை வைத்து பார்த்ததில் ஒருவர் பின் ஒருவர் வரிசையாக தேர்ச்சி பெற்றுள்ளதால் முறைகேடு நடந்துள்ளது அம்பலமாகியுள்ளது. பல்வேறு குளறுபடி மற்றும் நிர்வாக திறனின்றி திணறி வரும் டி.என்.பி.எஸ்.யில் தொடர்ந்து அரங்கேறி வரும் முறைகேடுகள், அரசு பணியை கனவாக எண்ணி காத்திருக்கும் இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00