வரும் 2024 தேர்தலில் ஒருங்கிணைந்த அஇஅதிமுக-வாக போட்டியிட்டு மகத்தான் வெற்றி பெறுவோம் : விரைவில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும், அம்மா வழியில் தமிழகத்தில் நல்லாட்சி அமையும் என கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டம்

May 26 2023 10:56AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒருங்கிணைந்த அஇஅதிமுகவாக, வரும் 2024ம் ஆண்டு தேர்தலை சந்தித்து மகத்தான வெற்றி பெறுவோம் என்றும், அதனைத்தொடர்ந்து, அம்மா வழியில் தமிழகத்தில் நல்லாட்சி அமையும் என்றும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா உறுதிபட தெரிவித்துள்ளார்.

வேளாங்கண்ணியில் இருந்து சென்னை திரும்பும் வழியில், கடலூரில் ஆங்கில செய்தி தொலைக்காட்சிக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கட்சியைப் பொறுத்தவரை தொண்டர்களின் முடிவே முக்கியமானது என்றார்.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டு விட்டதாக குற்றம்சாட்டிய சின்னம்மா, இந்த ஆட்சியில் பெண்களுக்கு துளியும் பாதுகாப்பு இல்லை என விமர்சித்தார்.

திமுக ஆட்சியில் கவுன்சிலர்கள் அனைவரும் ஒரு குட்டி ராஜாவாக வலம் வருவதாக கூறிய சின்னம்மா, காவல்துறை அதிகாரிகளே மிரட்டப்படுவதாக குற்றம்சாட்டினார்.

முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் வெளிநாடு செல்வதாக கூறுவதை சுட்டிக்காட்டிய சின்னம்மா, தமிழகத்தில் வீடுகள், தொழிற்சாலைகள் தேவைக்கே திமுக அரசால் போதிய மின்சாரத்தை வழங்க முடியாத சூழலில், வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கே வந்தால், அதற்கு எப்படி மின்சாரம் வழங்க முடியும் என கேள்வி எழுப்பினார்.

ஒருங்கிணைந்த அஇஅதிமுகவாக, வரும் 2024ம் ஆண்டு தேர்தலை சந்தித்து மகத்தான வெற்றி பெறுவோம் என்றும், அதனைத்தொடர்ந்து, அம்மா வழியில் தமிழகத்தில் நல்லாட்சி அமையும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா உறுதிபட கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00